comparemela.com


ரஜினியின் கோல்கட்டா பயணத்தில் மாற்றம்
15 ஜூலை, 2021 - 09:30 IST
1 கருத்துகள்  à®•à®°à¯à®¤à¯à®¤à¯ˆà®ªà¯ பதிவு செய்ய
எழுத்தின் அளவு:
நடிகர் ரஜினிகாந்தின் 168-வது படம் அண்ணாத்த. சிவா இயக்கும் இப்படத்தில் ரஜினியுடன் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. காமெடி, செண்டிமெண்ட், ஆக்ஷன் கலந்த கலகலப்பான படமாக உருவாகி இருக்கும் இந்தப் படம் வருகிற நவம்பர் 4ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
சமீபத்தில் தான் மருத்துவப் பரிசோதனைக்காக ரஜினி அமெரிக்கா சென்று சென்னை திரும்பினார். அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு 90 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில் மீதமுள்ள காட்சிளை படமாக்குவதற்காக இன்று படக்குழு கோல்கட்டா செல்ல இருந்தனர். ஆனால் சில காரணங்களால் ரஜினி கோல்கட்டா செல்வது தள்ளிப் போய் உள்ளது. எனவே சென்னையில் படமாக்கப்பட வேண்டிய காட்சிகளை படக்குழுவினர் படமாக்க உள்ளனர்.
சென்னையில் இரண்டு நாட்கள் படப்பிடிப்பு நடக்கவுள்ளது. கோல்கட்டாவில் கூடுதலான நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட வேண்டி இருப்பதால் சில நாட்கள் கழித்து படக்குழு கோல்கட்டா செல்லலாம் என்று கூறப்படுகிறது.
Advertisement
கருத்துகள் (1)
கருத்தைப் பதிவு செய்ய

Related Keywords

Kolkata ,West Bengal ,India ,Madras ,Tamil Nadu ,Prakash Raj , ,Rajinikanth Kolkata ,Rajinikanth United States ,கொல்கத்தா ,மேற்கு பெங்கல் ,இந்தியா ,மெட்ராஸ் ,தமிழ் நாடு ,பிரகாஷ் ராஜ் ,

© 2025 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.