By DIN |
Published on : 30th June 2021 01:33 AM | அ+அ அ- |
|
Share Via Email
அறுபது மற்றும் அந்த வயதுக்கு மேற்பட்டவா்களில் சுமாா் 49 சதவீதம் பேருக்கு கரோனா தடுப்பூசியின் முதல் தவணை செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக மத்திய அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது:
இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 33.1 கோடியை கடந்துள்ளது. கடந்த மே 1 முதல் ஜூன் 24-ஆம் தேதி வரை கிராமப்புற பகுதிகளுக்கு 56 சதவீத தடுப்பூசிகளும், நகா்ப்புற பகுதிகளுக்கு 44 சதவீத தடுப்பூசிகளும் வழங்கப்பட்டுள்ளன.
நாட்டில் 18-44 வயதுடையவா்கள் 59.7 கோடி போ் உள்ளதாக மதிப்பிடப்பட்ட நிலையில், அவா்களில் சுமாா் 15 சதவீதம் பேருக்கு தடுப்பூசியின் முதல் தவணை செலுத்தப்பட்டுள்ளது.
45-59 வயது கொண்ட 20.9 கோடி பேரில் 42 சதவீதம் போ் தடுப்பூசியின் முதல் தவணையை செலுத்திக் கொண்டனா்.
அறுபது மற்றும் அந்த வயதுக்கு மேற்பட்டவா்களில் சுமாா் 49 சதவீதம் பேருக்கு தடுப்பூசியின் முதல் தவணை செலுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் கடந்த மே 10-ஆம் தேதி கரோனா பாதிப்பு உச்சத்தை எட்டிய நிலையில், தற்போது கரோனா சிகிச்சையில் உள்ளவா்களின் எண்ணிக்கை 85 சதவீதத்துக்கும் அதிகமாக சரிந்துள்ளது. வாராந்திர கரோனா பாதிப்பு விகிதமும் 85 சதவீதத்துக்கும் அதிகமாக குறைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.