comparemela.com


ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை... இன்று அம்பாளை ஆராதிக்கவும், சக்தியை வணங்கி முக்தியைப் பெறவும் உகந்த நாள். அன்னையின் தாள் பணிந்து அடைக்கலம் புகுந்தால், சொல்லி முறையிட்டால் குடும்பத்தில் நிம்மதி நீடித்து நிலைக்கச் செய்வாள் தேவி.
எத்தனை வெள்ளிக்கிழமைகள் வந்தாலும் ஆடி வெள்ளிக்கு (Aadi Velli) என்று ஒரு தனிப்பெருமை உண்டு. அன்றைய தினம் விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டால் இன்பங்கள் இல்லம் தேடி வந்து கொண்டேயிருக்கும் என்பது நம்பிக்கை. கிழமைகளில் சுக்ர வாரம் என்றழைக்கப்படுவது வெள்ளிக்கிழமையாகும். துள்ளித் திரியும் சிங்கத்தில் ஏறி பவனி வரும் தூயவளாம் அம்பிகையை வெள்ளிக்கிழமை அன்று வழிபட்டால் நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெற வழிபிறக்கும்.
ஆடி வெள்ளியன்று மாலை நேரத்தில் அம்பிகையை, ஆதிபராசக்தியை, அகிலாண்டேஸ்வரியை, புவனேஸ்வரியை அலங்கரித்துப் பார்த்து வழிபாடு செய்தால் வளங்கள் அனைத்தும் வந்து சேரும். இதன் மூலம் குடும்ப முன்னேற்றமும், மாங்கல்ய பாக்கியமும், கணவருக்குத் தொழில் மேன்மையும் ஏற்படும். ஆடி வெள்ளியன்று குத்துவிளக்கு பூஜை செய்து சுமங்கலிப் பெண்களுக்கு ரவிக்கைத்துணி, தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, மஞ்சள், குங்குமம் வைத்துக் கொடுத்தால் நற்பலன்கள் வந்து சேரும். இல்லத்தில் மங்கலம் உண்டாகும்.
அதேபோல் ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளியன்றும் புற்றுள்ள அம்மன் கோயிலுக்குச் சென்று நாகருக்குப் பால் வார்த்துக் குலம் தழைக்க வேண்டுதல் செய்துகொள்ளலாம். முதல் வெள்ளியன்று இனிப்புத் தேங்காய் கொழுக்கட்டை, உப்பு, எள்ளுக் கொழுக்கட்டை ஆகியவற்றை நிவேதனம் செய்த வழிபடலாம். 
இன்று ஆடி வெள்ளி முதல் நாளில் பூஜை செய்வது என்ற சுலபமான வழிபாட்டு முறையை தெரிந்துக் கொள்ளலாம்.
* அதிகாலையில் பெண்கள் எழுந்து குளித்துவிட்டு, வீட்டை துடைத்து, பூஜை அறையை சுத்தம் செய்து, பூஜை அறையில் இருக்கும் எல்லா சுவாமி படங்களையும் துடைத்து பூக்களால் அலங்காரம் செய்ய வேண்டும். 
* வேப்ப இலையை கொண்டு வந்து உங்களுடைய வீட்டின் நிலை வாசலில் கட்டி வைத்துவிடுங்கள்.
* ஒரு சிறிய பித்தளை சொம்பு நிறைய தண்ணீரை ஊற்றி  அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், ஒரு சிட்டிகை குங்குமம், இரண்டு வேப்ப இலை போட்டு, இந்த தீர்த்தத்தில் உங்களுடைய குலதெய்வமும் அம்மனும் வந்து அமர வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.
* பூஜை அறையில் சிறிது நேரம் அமர்ந்து உங்களுடைய குல தெய்வத்தின் நாமத்தை மனதுக்குள் உச்சரிக்க வேண்டும்.
* அம்மனையும் குலதெய்வத்தையும் கலச சொம்பில் ஆவாகனம் செய்து, இந்த தீர்த்தத்தை பூஜை அறையில் வைத்து, சர்க்கரைப் பொங்கல் நிவேதனமாக வைத்து, தீப ஆராதனை காட்டி மனதார ஆடி மாத முதல் நாள் பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Related Keywords

Hindustan ,India General ,India ,Amman ,O11 ,Jordan ,Mangalam ,Tamil Nadu ,Baku ,Baki ,Azerbaijan , ,Twitter ,Facebook ,Jul Friday ,Home Live ,House Mangalam ,Amman Temple ,Paul Tribe ,ஹிந்துஸ்தான் ,இந்தியா ,அம்மன் ,ஜோர்டான் ,மங்கலம் ,தமிழ் நாடு ,பாகு ,அஜர்பைஜான் ,ட்விட்டர் ,முகநூல் ,வீடு வாழ ,அம்மன் கோயில் ,

© 2024 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.