comparemela.com


Print
உடல் நலக்குறைவு காரணமாக மேற்கு வங்காள நிதி மந்திரி அமித் மித்ரா பதவி விலக முடிவு செய்திருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
பதிவு: ஜூலை
12, 
2021
07:18
AM
கொல்கத்தா, 
மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த 2011-ம் ஆண்டு முதல் நிதி மந்திரியாக இருப்பவர் அமித் மித்ரா. கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், சிறந்த பொருளாதார நிபுணருமான அவரிடம் தொடர்ந்து 3-வது முறையாக நிதி இலாகா ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
ஆனால் 73 வயதான அமித் மித்ராவுக்கு சமீப காலமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. எனவே அவர் பதவி விலக முடிவு செய்திருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. இது குறித்து கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் கூறுகையில், ‘மாநில நிதி மந்திரியாக அமித் மித்ரா தொடர மாட்டார். அரசியலிலும், நிர்வாகத்திலும் தொடர விருப்பம் இல்லை என்பதை கட்சித்தலைமைக்கு அவர் அறிவித்து விட்டார். முதல்-மந்திரி மம்தா பானர்ஜியின் வற்புறுத்தலால்தான், கட்சி 3-ம் முறையாக ஆட்சிக்கு வந்தபோது நிதி இலாகாவை ஏற்றுக்கொண்டார்’ என தெரிவித்தார்.
இந்த கருத்தை உறுதி செய்த மற்றொரு தலைவர், அமித் மித்ரா விலகியபின் சிறிது நாட்களுக்கு முதல்-மந்திரியே நிதி இலாகாவை கவனிப்பார் எனவும், அதன் பிறகே புதிய மந்திரியிடம் ஒப்படைப்பார் எனவும் தெரிவித்தார்.
ஆசிரியரின் தேர்வுகள்...
1.
2.
3.
4.
5.

Related Keywords

Kolkata ,West Bengal ,India ,Mamata Banerjee ,Amit Mitra ,Office Step ,Amit Mitra Office Step ,He Office Step ,State Finance ,Chief Minister Mamata Banerjee ,கொல்கத்தா ,மேற்கு பெங்கல் ,இந்தியா ,மாமத பானர்ஜி ,அமித் மித்ரா ,நிலை நிதி ,தலைமை அமைச்சர் மாமத பானர்ஜி ,

© 2024 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.