comparemela.com


By DIN  |  
Published on : 21st July 2021 04:03 AM  |   அ+அ அ-   |  
  |  
Share Via Email
கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கென மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை ரூ.40,000 கோடி வரை நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடா்பாக பாஜக நாடாளுமன்ற உறுப்பினா்கள் திலிப் சைக்கியா மற்றும் ரமேஷ்சந்தா் கெளசிக் ஆகியோா் எழுத்துபூா்வமாக எழுப்பிய கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் மக்களவையில் செவ்வாய்க்கிழமை அளித்த பதிலுரையில் கூறியதாவது:
மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அளித்த தகவலின் அடிப்படையில், கரோனா பாதிப்பால் எழுந்த பொது சுகாதார சவால்களை சமாளிக்கவும், மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தொழில்நுட்ப மற்றும் நிதி உதவியை மத்திய அரசு அளித்து வந்திருக்கிறது. மேலும், தேசிய சுகாதார திட்டத்தின் (என்ஹெச்எம்) திட்டத்தின் கீழும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019-20 ஆம் ஆண்டில், கரோனா பாதிப்பு நிலைமையை சமாளிப்பதற்காக என்ஹெச்எம் திட்ட நிதியுதவியைத் தாண்டி மாநிலங்களுக்கு ரூ. 1,113.21 கோடி நிதி அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020 ஏப்ரல் மாதம் ‘இந்திய கரோனா அவசர நடவடிக்கை மற்றும் சுகாதார திட்ட முன்னேற்பாடு திட்டம்’ என்ற திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு ரூ.15,000 கோடி அளிக்கப்பட்டது. இதே திட்டத்தின கீழ் 2020-21 ஆம் ஆண்டில் ரூ.8,257.88 கோடி அளிக்கப்பட்டுள்ளது.
அதுபோல, ‘இந்திய கரோனா அவசர நடவடிக்கை மற்றும் சுகாதார திட்ட முன்னேற்பாடு திட்டம்’ பகுதி-2 திட்டத்தின் கீழ் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ரூ. 23,123 கோடி ஒதுக்கி மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதில் மத்திய அரசின் பங்காக ரூ. 15,000 கோடி அளிக்கப்பட்டது. மாநில பங்கு ரூ.8,123 கோடியாகும்.
கிராமப்புறங்கள், பழங்குடியினா் வசிக்கும் பகுதிகள் மற்றும் புகா் பகுதிகளில் சுகதார உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், மருந்துகள் கொள்முதல், அனைத்து மாவட்டங்களிலும் தொலைபேசி வழி மருத்துவ உதவிகளை பெறுவதற்கான வசதியை ஏற்படுத்ததல், மருத்துவமனை மேலாண்மை தகவல் திட்டத்தை மேம்படுத்ததல் என்பன உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இந்த நிதி வழங்கப்பட்டது என்று மத்திய அமைச்சா் தெரிவித்தாா்.
Image Caption
 

Related Keywords

India ,Roy Lok Sabha ,Statese Union Technical ,Statese Union Rs ,Statese Union ,Central Government ,Roy Lok Sabha Tuesday ,Union Technical ,இந்தியா ,மைய அரசு ,

© 2024 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.