comparemela.com


Advertisement
மத்திய பா.ஜ., ஆட்சி, மக்களின் அன்றாட பிரச்னைகளை தீர்க்காமல், மதங்களுக்கு இடையே வேறுபாடுகளை அதிகப்படுத்தி, மத துவேஷங்களை உருவாக்குவதிலேயே கவனமாக இருக்கிறது.- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலர் முகமது அபுபக்கர்'மதங்களுக்கு இடையே அவர்கள் துவேஷத்தை ஏற்படுத்துவதாகவே இருக்கட்டும்; உங்களைப் போன்ற மதக் கட்சிகள், மதங்களுக்கு இடையே ஒற்றுமைக்கு முயலலாமே;
முழு செய்தியை படிக்க
Login செய்யவும்
மத்திய பா.ஜ., ஆட்சி, மக்களின் அன்றாட பிரச்னைகளை தீர்க்காமல், மதங்களுக்கு இடையே வேறுபாடுகளை அதிகப்படுத்தி, மத துவேஷங்களை உருவாக்குவதிலேயே கவனமாக இருக்கிறது.
- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலர் முகமது அபுபக்கர்
'மதங்களுக்கு இடையே அவர்கள் துவேஷத்தை ஏற்படுத்துவதாகவே இருக்கட்டும்; உங்களைப் போன்ற மதக் கட்சிகள், மதங்களுக்கு இடையே ஒற்றுமைக்கு முயலலாமே; அதை விட முக்கிய பணி உங்களுக்கு என்ன...' என, கிடுக்கிப்பிடி போடத் தோன்றும் வகையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலர் முகமது அபுபக்கர் பேச்சு.
வரும் 2026ல் பா.ஜ., ஆட்சி என பா.ஜ., புதிய தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது, கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காக இருக்கலாம். அவருக்கு என் வாழ்த்துக்கள். முடிவை மக்கள் தீர்மானிப்பர்.
- அ.தி.மு.க., துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி
'நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் எடுக்கப்பட்டது போன்ற முடிவை, மக்கள் மீண்டும் எடுப்பரோ...' என, கிண்டலாக கேட்கத் தோன்றும் வகையில், அ.தி.மு.க., துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி பேட்டி.
மத்திய அரசு, தடுப்பூசியில் கூட ஊழல் செய்கிறது; தடுப்பூசி தயாரிப்பிலும் ஊழல் நடக்கிறது. காங்., அழுத்தத்தின் காரணமாகவே மக்களுக்கு இலவச தடுப்பூசி போடப்படுகிறது.
- கரூர் காங்., - எம்.பி., ஜோதிமணி
'அட, புது 'ஐட்டமாக' இருக்கிறதே... இப்படி அப்பட்டமாக பேசும் நீங்கள், மத்திய அரசு மீது வழக்கு தொடர்ந்து, உண்மையை அம்பலப்படுத்தலாமே...' என, 'அட்வைஸ்' சொல்லத் தோன்றும் வகையில், கரூர் காங்., - எம்.பி., ஜோதிமணி பேட்டி.
மீனவர்களை பாதிக்கும் எந்த சட்டம் கொண்டு வந்தாலும் அதை எதிர்ப்போம். கச்சத்தீவை மீட்க மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறோம்; உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு நடத்தி வருகிறோம். எந்த வகையிலாவது கச்சத்தீவை மீட்கும் நடவடிக்கைகளை முதல்வர் எடுப்பார்.
- தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
'கச்சத்தீவை தாரை வார்த்ததே, தி.மு.க.,வும், காங்கிரசும் தான் என, அ.தி.மு.க.,வினர் கூறுகின்றனரே...' என நினைவுபடுத்தத் தோன்றும் வகையில், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேட்டி.
சமீபத்தில், ஐந்து மாநில சட்டசபை தேர்தல் நடந்தது. அதற்கு பின், 10 வாரங்களில், 40 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் விலையும் உயர்ந்து விட்டது.
- திருவனந்தபுரம் காங்., - எம்.பி., சசி தரூர்
'உண்மை தான். கேரளாவில் கம்யூ., அரசு செய்தது போல, பெட்ரோல், டீசல் வரியை, தமிழக அரசிடம் சொல்லி குறைக்க சொல்லுங்களேன் பார்ப்போம்...' என, சொல்லத் தோன்றும் வகையில், திருவனந்தபுரம் காங்., - எம்.பி., சசி தரூர் பேட்டி.
கொரோனா பெருந்தொற்றில் மிகவும் பாதிக்கப்பட்ட வணிகர்கள் இப்போது தான் மீண்டு வருகின்றனர். இந்நிலையில், கடைகளுக்கு சீல் வைப்பு, அபராதம் விதிப்பு என பல அரசு அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதை நிறுத்த வேண்டும்.
- தமிழக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா
'எதற்கெடுத்தாலும் வணிகர்கள் மீது நடவடிக்கை எடுப்பதே, அதிகாரிகளின் வழக்கமாக போய் விட்டது. கூட்டமாக அலையும் கட்சியினர் மீது அவர்களால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது...' என, ஒப்புக்கொள்ளத் தோன்றும் வகையில், தமிழக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அறிக்கை.
Submit
×
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும்,
My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
Close X

Related Keywords

India ,Kerala ,Anita Radhakrishnan ,Muhammad Abu Bakr ,Karur Cong ,Trivandrum Cong ,Shashi Tharoor ,India Union Muslim League ,India Union Muslim League State ,Secretary Muhammad Abu Bakr ,Central Government ,Secretary Anita Radhakrishnan ,Kerala Communist ,இந்தியா ,கேரள ,அனிதா ராதாகிருஷ்ணன் ,முஹம்மது பக்ர் ,இந்தியா தொழிற்சங்கம் முஸ்லீம் லீக் ,மைய அரசு ,

© 2024 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.