comparemela.com


Advertisement
வரும் காலங்களில் மாநகராட்சி உட்பட உள்ளாட்சி, எம்.பி., - எம்.எல்.ஏ., தேர்தல்களில் நாம் வெல்ல வேண்டுமானால், மிக அதிகமாக மக்கள் பணி தேவை. நம் முன்னோர், தலைவர்கள் உருவாக்கிய கட்டமைப்பை உருவாக்க உழைப்போம்.- காங்., - எம்.எல்.ஏ., திருமகன் ஈவெரா'காங்., மீது தமிழக மக்களுக்கு எந்த பிடித்தமும் இல்லை. தனித்து நின்றால், ஒரு இடம் கூட கிடைக்காது. எனவே, வருங்காலம் காங்.,கிற்கு கஷ்ட காலம்
முழு செய்தியை படிக்க
Login செய்யவும்
வரும் காலங்களில் மாநகராட்சி உட்பட உள்ளாட்சி, எம்.பி., - எம்.எல்.ஏ., தேர்தல்களில் நாம் வெல்ல வேண்டுமானால், மிக அதிகமாக மக்கள் பணி தேவை. நம் முன்னோர், தலைவர்கள் உருவாக்கிய கட்டமைப்பை உருவாக்க உழைப்போம்.
- காங்., - எம்.எல்.ஏ., திருமகன் ஈவெரா
'காங்., மீது தமிழக மக்களுக்கு எந்த பிடித்தமும் இல்லை. தனித்து நின்றால், ஒரு இடம் கூட கிடைக்காது. எனவே, வருங்காலம் காங்.,கிற்கு கஷ்ட காலம் தான்...' என, கூறத் துாண்டும் வகையில், காங்., - எம்.எல்.ஏ., திருமகன் ஈவெரா பேச்சு
அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் நியமனத்தின்போது, அதற்கான பயிற்சி முடித்து, 14 ஆண்டுகளாக காத்திருப்போருக்கு பணி கிடைக்கும் வகையில், 35- -40 வயதுடைய, 76 பேர் ஒருமுறை மட்டும் வயது தளர்வு கேட்டுள்ளனர். தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்.
- மார்க்சிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன்
'முதலில் உங்கள் கட்சியில், இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள். எல்லா பொறுப்புகளிலும், 60 - 80 பேர் தான் உள்ளனர்...' எனக் கூறத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன் அறிக்கை.
.
நம் வாழ்க்கைக்கு முழுமையாக பயன்படும் பனைமரங்களை, செங்கள் சூளைகளுக்கு வெட்டி அழிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். குறிப்பாக, இளைஞர்கள் இந்த பணியில் ஈடுபட வேண்டும்.
- தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ நெடுமாறன்
'உண்மை தான். நம் நாட்டு மரமான பனைமரங்களை அழித்ததில், பெரும் பங்கு செங்கல் சூளைகளுக்குத் தான் உண்டு...' என, சொல்ல தோன்றும் வகையில், தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ நெடுமாறன் அறிக்கை.
கொரோனாவை பற்றி கவலைப்படாமல் மக்கள் அலை அலையாக அலைகின்றனர். மூன்றாவது அலையிலிருந்து மக்களை காக்க வேண்டுமானால், தளர்வுகளை கடுமையாக்க வேண்டும். அவ்வாறு செய்வதே நாட்டுக்கும், வீட்டுக்கும் நல்லது.
- தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்
'எத்தனை காலம் தான் வீடுகளுக்குள் மக்களை பூட்டி வைப்பது... அதனால் ஊரடங்கு போன்றவை இனி சரிப்பட்டு வராது...' எனக் கூறத் தோன்றும் வகையில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் அறிக்கை.
கேரளா போல் தமிழகத்திலும் 'நீரா' பானம் இறக்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியபோது, முந்தைய அ.தி.மு.க., அரசு, 2017 இறுதியில் சில நிபந்தனைகளுடன் அனுமதித்தது. எனினும், இதற்காக அரசு துவங்கிய மூன்று உற்பத்தி மையங்களும் தற்போது மூடப்பட்டு விட்டன. அதை திறக்க அனுமதிக்க வேண்டும்.
- தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி
'இப்போது 'டாஸ்மாக்' கடையே கதி என கிடப்பவர்கள், கள்ளுக் கடை திறந்தால், அங்கேயே விழுந்து கிடப்பர் என்பதால், அவற்றை திறக்க, தமிழக அரசு யோசிக்கிறதோ என்ற, 'டவுட்' வருகிறது...' என, சொல்ல துாண்டும் வகையில், தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி பேட்டி.
Submit
×
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும்,
My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
Close X

Related Keywords

Spain ,Spanish , ,Vijayakanth Report ,Kerala As Tamil Nadu ,ஸ்பெயின் ,ஸ்பானிஷ் ,

© 2024 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.