comparemela.com

Card image cap


 
Advertisement
ரியோ டி ஜெனிரோ-பிரேசிலின் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ, தடுப்பூசி கொள்முதலில் ஊழல் செய்ததாக எழுந்த புகாரை அடுத்து, இதுகுறித்து விசாரிக்க, அந்த நாட்டின் உச்ச நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.அவருக்கு எதிராக நாடு முழுதும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில், தென் அமெரிக்க நாடான பிரேசிலும் ஒன்று.இங்கு கொரோனாவால் ஐந்து
முழு செய்தியை படிக்க
Login செய்யவும்
ரியோ டி ஜெனிரோ-பிரேசிலின் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ, தடுப்பூசி கொள்முதலில் ஊழல் செய்ததாக எழுந்த புகாரை அடுத்து, இதுகுறித்து விசாரிக்க, அந்த நாட்டின் உச்ச நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
அவருக்கு எதிராக நாடு முழுதும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில், தென் அமெரிக்க நாடான பிரேசிலும் ஒன்று.இங்கு கொரோனாவால் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் அதிக பலியில், அமெரிக்காவுக்கு அடுத்து, இரண்டாவது இடத்தில் பிரேசில் உள்ளது.கொரோனா வைரஸ் பரவலை தடுக்க சரியான நடவடிக்கை எடுக்காததால் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் தடுப்பூசி வழங்குவதும் மந்தமாக உள்ளதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இந்நிலையில் நம் நாட்டின் தெலுங்கானா மாநிலம் ஐதராபாதை தலைமையிடமாக வைத்து செயல்படும் 'பாரத் பயோடெக்' நிறுவனம் தயாரிக்கும் 'கோவாக்சின்' தடுப்பூசியை வாங்குவதற்காக, அந்த நிறுவனத்துடன் பிரேசில் அரசு ஒப்பந்தம் செய்தது.இதில் முறைகேடு நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன.
இந்த ஊழலில் அதிபர் போல்சனாரோவின் தொடர்பு குறித்து விசாரிக்க, அந்த நாட்டின் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.இதையடுத்து அதிபர் பதவியில் இருந்து அவரை நீக்கக் கோரி, நாட்டின் பெரும்பாலான நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Submit
×
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும்,
My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
Close X

Related Keywords

United States , India , Telangana , Andhra Pradesh , Brazil , Bharat , , Brazil Chancellor , Telangana New York , Brazil Government Agreement Profile , ஒன்றுபட்டது மாநிலங்களில் , இந்தியா , தெலுங்கானா , ஆந்திரா பிரதேஷ் , பிரேசில் , பாரத் ,

© 2024 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.