comparemela.com


By DIN  |  
Published on : 01st July 2021 02:21 AM  |   அ+அ அ-   |  
  |  
 
புது தில்லி: மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரரை 32.12 கோடி கரோனா தடுப்பூசி டோஸ்களை மத்திய அரசு வழங்கியுள்ளது.
73 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் டோஸ்கள் (73,00,166) செலுத்துவதற்கு தயாா் நிலையில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிடம் இருப்பு உள்ளன.
அதிக தடுப்பூசிகள் கிடைக்கச் செய்வதன் மூலம் தடுப்பூசி போடும் நடவடிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது. தடுப்பூசி போடுவதை சிறப்பாக திட்டமிடுவதற்கும், தடுப்பூசி விநியோகத்தை ஒழுங்குபடுத்துவதற்கும், தடுப்பூசி கிடைக்கும் நிலவரம் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படுகிறது.
நாடு தழுவிய தடுப்பூசி திட்டத்தின் ஒரு பகுதியாக, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு தடுப்பூசிகளை இலவசமாக வழங்குகிறது.
18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போடும் புதிய திட்டத்தின்படி, தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்கள் தயாரிக்கும் 75 சதவீத தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் இலவசமாக வழங்குகிறது.
இதுவரை மத்திய அரசு 32.13 கோடி (32,13,75,820) தடுப்பூசிகளை இலவசமாகவும் மற்றும் மாநிலங்களின் நேரடி கொள்முதல் மூலமாகவும் வழங்கியுள்ளது. இவற்றில், வீணான தடுப்பூசிகள் உள்பட 31,40,75,654 டோஸ்கள் காலியாகியுள்ளன.
73 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் டோஸ்கள் (73,00,166) இன்னும் போடுவதற்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் கைவசம் உள்ளன. அடுத்த 3 நாள்களில், 24,65,980 தடுப்பூசிகள் அளிக்கப்படவுள்ளன.
O

Related Keywords

United States ,New Delhi ,Delhi ,India , ,Statese Union Central Government ,Statese Union ,Central Government ,Source States ,Union Central Government ,Central Government Purchase ,ஒன்றுபட்டது மாநிலங்களில் ,புதியது டெல்ஹி ,டெல்ஹி ,இந்தியா ,மைய அரசு ,தொழிற்சங்கம் மைய அரசு ,

© 2024 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.