comparemela.com


பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) தலைமையிலான அமைச்சரவை சமீபத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் தமிழக பாஜக தலைவராக இருக்கும் எல்.முருகன் மத்திய அமைச்சரவைக்கு தேர்வு செய்யப்பட்டதால் அந்த பதவிக்கு இந்திய காவல் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று பாஜகவில் இணைந்த அண்ணாமலை தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழக பாஜகவின் தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்தார்.
பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் இருவருக்கும் அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டது.  இவர்கள் இருவரும் எம்.எல்.ஏவாக இருப்பதால் அண்ணாமலைக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில் தமிழக பாஜக (BJP) தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அண்ணாமலை இன்று சென்னை தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெறுகிறது.
பதவி ஏற்பு நிகழ்ச்சிக்காக, நேற்று முன் தினம் காலை 9.30 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்ட, அண்ணாமலை பல்லடம், திருப்பூர்,  ஈரோடு, சங்ககிரி, பெருந்துறை, சேலம், நாமக்கல், பரமத்தில் வேலூர், கரூர், குளித்தலை வழியாக திருச்சி வந்தடைந்தார்.  நேற்று காலை அங்கிருந்து புறப்பட்ட அண்ணாமலை, பெரம்பலூர், தொழுதூர் சந்திப்பு, வேப்பூர் சந்திப்பு, உளுந்தூர்பேட்டை, விக்கிரவாண்டி, திண்டிவனம், விழுப்புரம், மேல்மருவத்தூர், மதுராந்தகம், செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, தாம்பரம் வந்தடைந்தார். அவருக்கு வழியெங்கிலும் உற்சாக வரவேற்பு காணப்பட்டது. 
கர்நாடக மாநில ஐ.பி.எஸ் (IPS) அதிகாரியான அண்ணாமலை, கடந்த 2018ஆம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பாஜகவில் இணைந்தார். கட்சியின் இணைந்தவுடன் கட்சியின் மாநில துணைத் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். தற்போது மாநிலத் தலைவராக பொறுப்பு  ஏற்க உள்ளார்
இன்று தாம்பரமத்தில் இருந்து சென்னை தியாகராயநகரில் உள்ள கமலாலயத்துக்கு செல்ல உள்ள அண்ணாமலைக்கு மதியம் 1.45 மணிக்கு கமலாலயத்தில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. இந்த வரவேற்பு விழாவில்  மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி உள்ளிட்ட பலர் கலந்துகொள்கின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Related Keywords

Tindivanam ,Tamil Nadu ,India ,Perundurai ,Tirupur ,Namakkal ,Karnataka ,Guduvancheri ,Karur ,Vikravandi ,Ulundurpettai ,Trichy ,Tambaram ,Vellore ,Villupuram ,Madras ,Teri Palladam ,Nainar Nagendran ,Office India ,Twitter ,Facebook ,Murugan Central ,State Consulate ,திந்ிவானம் ,தமிழ் நாடு ,இந்தியா ,பெருந்துறை ,திருப்பூர் ,நமக்கல் ,கர்நாடகா ,குடுவஞ்சேரி ,கரூர் ,விக்ரவண்டி ,உழுந்தூர்ப்ேத்தை ,திருச்சி ,தம்பரம் ,வேலூர் ,வில்லுபுரம் ,மெட்ராஸ் ,நைனார் நாகேந்திரன் ,அலுவலகம் இந்தியா ,ட்விட்டர் ,முகநூல் ,

© 2024 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.